Wednesday, May 25, 2011

மரம்

பட்டு போன மரம் கூட இன்று துளிர் விடுகிறது அவள் வருகைக்காக.....

Tuesday, May 24, 2011

அழுக்கு மூட்டை


அழுக்கு மூட்டையில் அழகு இல்லா துணி.....
அவள் வந்த உடனே வெளுக்க தொடங்கின

கடவுளிடம் ஒரு காதலன் கேட்ட கேள்வி?

காதல் எப்படி பிறந்தது?
கவிதைகள் எப்படி புரிந்தது?
காலம் எப்படி முடிந்தது?
காதல் இல்லை எனில் கவிதைகள் புரியாது....!
காதல் இல்லை எனில் காலங்கள் முடியாது.....!
காதல் இல்லை எனில் இப்படி ஒருவன் என்னிடம் கேள்வி கேட்க முடியாது.....!

Saturday, May 14, 2011

காலடி....


உதிர்ந்த பூக்கள்....
உலரா உப்பு....
ஓய்வில்லா அலைகள்....
உணர்வில்லா மணல்கள்...
இது எல்லாம் உன் காலடி படுவதற்காக
துடித்து கொண்டு இருக்கிறது...

Friday, May 6, 2011

அழுகிறது பூமி..

கலங்குகிறது தண்ணீர்...
கரைகிறது செம்மண்...
ஆழ்கிறது வானம்....
அலைகிறது அலைகள்...
தவிக்கிறது மீன்கள்...
அசைய மறுகிறது மரங்கள்...
அழுகிறது பூமி..
அவள் வருகையை எதிர்பார்த்து....

அட்ச்சாணி.....


மாட்டு வண்டியின் சக்கரத்தின் இடையில் மாட்டிய அட்ச்சாணி போல
என் மனது உன் நினைவில் மாட்டிகொண்டு துடிக்கிறது....

Monday, May 2, 2011

மரகொத்தி


மரத்து போன என் இதயத்தில்
மரகொத்தியாக வந்து அடிக்கடி உன் நினைவால் என்னை கொத்தி விட்டு செல்லுகிறாய்......

10நீ


விடிவில்லா இரவு நீ...(1)
விடை இல்லா கேள்வி நீ...(2)
விரிவில்லா ஓடை நீ....(3)
விலை இல்லா பொருள் நீ...(4 )
விசை இல்லா சுழற்சி நீ....(5 )
விதை இல்லா செடி நீ...(6 )
விருப்பம் இல்லா ஆசை நீ...(7 )
விரிவு இல்லா சுருக்கம் நீ....(8 )
விழி இல்லா ஒலி நீ.....(9 )
விளக்கம் இல்லா கரு நீ....(10 )
விதி முழுவதும் என் 10நீ....நீ ..நீ...நீ