Monday, February 28, 2011

நான் கொடுத்தேன்..... என் காதலை.....


இறுகி போன என் மனது...
அவளை கண்ட முதல் இறகாக மாறியது...
சிரிப்பே வராத என்னை....சிரிக்க வைத்தவள்.....
சிதறி போன என்னை சிற்பி ஆக்கியவள்...
சிந்தனை இல்லாத என்னை கண்ணதாசனாக மாற்றியவள்....
இருட்டாக இருந்த என்னை வெளுச்சமாக ஆக்கியவள்...
சின்னத்திரை ஆக இருந்த என்னை வெள்ளிதிரையாக மாற்றியவள்....
இந்த கருங்கல்லை வைர கல்லாக மாற்றியவள்.....
இதற்கு எல்லாம் கொடுக்க என்னிடம் காசில்லை....
அதனால் நான் கொடுத்தேன்..... என் காதலை.....

அவள்


அவள் முகம் எனக்கு....முழு நிலா!
அவள் கண்ணம் எனக்கு அரை நிலா !
அவள் இமை எனக்கு மூன்றாம் பிறை...
அவள் கண் எனக்கு பவர்ணமி...
அவள் கருவிழி எனக்கு அம்மாவாசை...
அவள் சிரிப்பு சிதறிய நட்சத்திரம்....
அவள் உதடு எனக்கு தேய்பிறை...
அவள் உள்ளம் எனக்கு வளர்பிறை...
மொத்தத்தில் அவள் ஒரு வெண்ணிலா...

Friday, February 25, 2011

இரு இதயம்


ஒரு காதல்
ஒரு இரவு, ஒரு பகல்
ஒரு பிறப்பு, ஒரு இறப்பு,
ஒரு சிரிப்பு, ஒரு அழுகை,
ஒரு காதல், ஒரு காதலி,
ஒரு இதயம், ஆனால் அவள் மட்டும் என் இரு இதயம் படைத்தவளாக இருக்கிறாள்....(ஒன்று போனால் இன்னொன்று)

காதல் மந்திரவாதி...


காதல் காதல் மந்திரவாதி...
என் இதய காயத்துக்கு மருந்து என்னடி....
உன் ஒரு சொட்டு கண்ணீர் போதுமடி....
இந்த இதயம் இறகாக ஆகுதடி...
உன் இமைகள் கண்ட மாத்திரத்தில்....என் இதயம் இருளில் மூள்கிறது...
உன் கன்னத்தில் விழும் குழியில் என்னை தற்கொலை செய்ய வைக்கிறாய்...நீ...உன் உதட்டு சிரிப்பிலே என் நரம்பை உதர வைக்கிறாய் நீ.....
ஒரு வார்த்தை சொல்லிவிடு...
என் உசுரை எனக்கு திருப்பி கொடுத்து விடு....

Wednesday, February 23, 2011

அறுவடை


என் உறக்கம் தொலைந்தது....
இரவாக இருந்தாலும் என் இதயம் முழவதும் நீ விவசாயம் செய்கிறாய்....
அதனால் என்னவோ என் உடலை விட உன் இதயம் என்னிடம் வளர்ந்து கொண்டு இருக்கிறது...அதை நீ அறுவடை செய்து விடாதே....அன்பே என் உயிர் நீங்கி விடும்....

Thursday, February 17, 2011

சிறைவாசம்



உன் கண்கள் மோதி என்னை காய படுத்திவிட்டாய் ...
என் சிறைவாசம் உன் இமைகளுக்குள் .....





Wednesday, February 2, 2011

உயிர் கொடுத்துவிடு....


எதோ நாபகம்....என்னுள்..
அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறேன்..... உன்னை பார்த்த முதல்......
என்னை நான் தொலைத்து விட்டேன்... உன் காலடியில்...
இப்போது தேடி கொண்டு இருக்கிறேன்....உன்னிடம்...என் இதயத்தை...
இருந்தால் கொடுத்து விடு......உன் இதயத்தை....என்னிடம்...
உயிர் மட்டும் இருக்கிறது......ஆனால் உயிரற்ற பொருளாக இருக்கிறேன் உன் எதிரே....
ஒரு வார்த்தை சொல்லிவிடு......இந்த உயிரற்ற பொருளுக்கு உயிர் கொடுத்துவிடு....

Tuesday, February 1, 2011

கோலம்


நீ புள்ளிகள் இட்டது என் இதயத்தில்...
அதனால் என்னவோ என் இதயம் முழுவதும் நீ இட்ட கோலமாக இருக்கிறது...