இதயம் இணைந்து விட்டதா....
இல்லை என் இதயம் கனத்து விட்டதா...
என் இதயம் இருண்டு விட்டதா...
அதன் மேல் உன் நிழல் பட்டு விட்டதா ...
என் இதயம் பறந்து விட்டதா..
உன் மேனி என்மேல் பட்டு விட்டதா...
உன் சிரிப்பு கொட்டி விட்டதா...
அதை சேர்த்து என் இதய சுவர் கட்டி விட்டதா....
உன் பார்வை பட்டு விட்டதா...
அதில் என் உயிர் கேட்டு விட்டதா....
தென்றல் என்னை கடந்து விட்டதா..
அதில் உன் கூந்தல் என் இதயத்தை கட்டி விட்டதா..
என் நிழல் என்னை திட்டி விட்டதா..
உன் நிழல் என்னை விட்டு பிரிந்து விட்டதா...
என் உயிர் உன்னுடன் கலந்து விட்டதா ...
இல்லை உன் உயிர் என்னுடன் இருந்து விட்டதா...