தென்றலை தேடி பார்த்தேன் அது துளைந்து விட்டதா ? இல்லை... இல்லை...
அது உன் கூந்தல் தீண்டும் போதுதான் தெரிகிறது அது உனது அருகில் இருக்கிறது.....என்று...
என் நிழலை தேடி பார்த்தேன் அது மறைந்து விட்டதா ? இல்லை..இல்லை..
உன் பின்னாலே வந்து கொண்டே இருக்கிறது ...என்று...
என் இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டதா? இல்லை..இல்லை..
அது உன்னை பற்றி சிந்தனையில் ஆழ்ந்து விட்டது ..என்று...
உன் சிரிப்பு சிந்தி விட்டதா? இல்லை ....இல்லை..
சிந்திய தேனை சேகரித்து வைக்கும் எறும்பாக உன் சிரிப்பை என் மனம் சேகரித்து விட்டதே என்று..
என் கண்கள் ஒளியை இழந்து விட்டதா? இல்லை..இல்லை..
அது உன் அழகில் மறைந்து விட்டது என்று.....
என் உயிர் பிரிந்து விட்டதா?இல்லை..இல்லை..
அது உனக்காக இன்னும் என்னுள் இருந்து கொண்டு இருக்கிறது என்று.....
No comments:
Post a Comment