Friday, January 28, 2011

என் வீடு, என் காடு....


ஜன்னல் ஓரத்தில் இருக்கும் என் குருவி கூடு......
பக்கத்து விட்டு என் சரசு பாட்டி, ரஞ்சனா அக்கா, ரவி அண்ணா, பொன்னுசாமி தாதா ...
எங்கள் விட்டில் எதிரில் உள்ள ஆலமரம்...
இதோ நான் மூன்று மாததிருக்கு முன்னால் என் அப்பாவுடன் என் வயலில்
நட்ட என் சூரியகாந்தி செடி இப்போது எங்கள் வயல் முழுவதும் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறது...
எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒரு பொம்மை வாங்கியது....
என் ஊர் ஆற்றில் நான் முதல் முதலாக பிடித்த என் மீன்...
எங்கள் விட்டில் என்னுடைய ரோசி நாய்க்குட்டி குட்டி போட்டது.....
நானும் என் தோழியும் சிறிய அடுப்பில் சோறு செய்து சாப்பிட்டது...
எங்கள் பள்ளியில் எங்கள் வாத்தியார் என்னை கையெழுத்து பெரிது பெரிதாய் இருக்கிறது என்று சொல்லி அடித்ததை....
விட்டு தெரியாமல் திருட்டு பீடி அடித்தது...
எங்கள் கிராமத்தில் பண்டிகை நாளில் தெருவில் எம். ஜி.ஆர் படத்தை போட்டபின் திரைக்கு பின்னால்
எம். ஜி.ஆர் இருக்கிறரா என்று பாத்து
எமாந்து போனது....
என் விட்டு கிணற்றில் என் வாத்தியாரை திட்டி பார்த்து வரும் எதிரொலியை கேட்டு சிரித்து கொண்டது.....
எங்கள் ஊரிலே இருக்கிற பஞ்சாயத்து தொலைகாட்சி பெட்டியை பார்த்து பூரித்து போனது.....
என் தம்பி இருவரும் பிறக்கும் போது எனக்கு தங்கச்சி பிறக்கவேண்டும் என்று அழுதது..
என் விட்டு மொட்டை மாடியில் வடகம் காய போட்டு இருந்ததை திருடி சாபிட்டது...
இது எல்லாம் நான் எழுதி கொண்டு இருதேன் நான் விளையாடிய வீட்டை விற்று பக்கத்து விட்டில் இருந்து கொண்டு..
என் வீடு, என் காடு, இது எல்லாம் இப்போது என் கண் முன்னே பெரிய பெரிய கடைகளாக, வீடுகளாக மாறி இருந்தது...

முற்றுபுள்ளி

ஒரே வரியில் சொல்லி விடுவாய் என்னை காதலிக்கிறேன் என்று....
முற்றுபுள்ளியாய் இருக்கும் என் வாழ்கை கமாவாக மாறிவிடும்...

என்னையும் உனக்கு பிடிக்குமா


வானவில்லை உன்னக்காக ஆடையாக ஆக்க ஆசைப்பட்டேன்..
ஆனால் வானவில்லை அழகை விட நீ அழகாக இருப்பதால் உனக்கு பயந்து
எங்கேயோ ஓடி மறைந்து கொண்டது....
பனித்துளியை உனக்காக அருவியாக அமைக்க ஆசை பட்டேன்..
ஆனால் என்னவோ உன் மேனி அழகை கண்டு தொட பயப்பட்டு
எங்கேயோ பாய்ந்து கொண்டது....
சூரியனை கூட கட்டி இழுத்து வந்து உன் நெற்றிக்கு பொட்டாக இட ஆசைப்பட்டேன்...
ஆனால் என்னவோ அது கூட உன் நெற்றியில் இருக்கும்போதுதான் அழகாக இருக்கிறது என்று
யாரவது சொல்லி விடுவார்கள் என்று மாயமாய் மறைந்து கொண்டது....
இப்படியெல்லாம் இருக்கும் உன் அழகை கண்டு நான் அந்த அழகில் நான் என்னை மறைத்து கொண்டேன்..
என்னையும் உனக்கு பிடிக்குமா என்று பயத்தோடு.....

இந்த பூமியில் காதல் இருக்கும் வரை....


இதோ வருகிறது என் வால் நட்சத்திரம்..
ஒருகோடி ஆண்டுகளாக உன்னகுதான் காத்து கொண்டு இருக்கிறேன் போலும்.
உன்னை பார்த்து போது தான் இந்த பூமி எனக்கு புதியதாய் தெரிகிறது.
காதல் தான் முதலில் பிறந்து இருக்க வேண்டும். அதனால் என்னவோ
நான் உன்னை பார்த்த இந்த நிமிடத்தில் இந்த பூமி என்னை சுற்றுகிறது.
காதல் இருப்பது தெரிந்து கொண்டுதான் இறைவன் இந்த பூமிக்கு வர மறுக்கிறான்,
ஏன் என்றால் இங்கேயோ தங்கி விடுவோம் என்று...
2012 - ல் பூமி அழிகிறது என்றார்கள்...நான் சொல்லுகிறேன் இந்த பூமியில் காதல் இருக்கும் வரை
2012- கோடி ஆண்டுகள் ஆனாலும் இந்த பூமி அழியாது.

Wednesday, January 26, 2011

என் இனிய தோழியின் பிறந்த நாள்


இனிய காலை பொழுது என் இனிய தோழியின் பிறந்த நாள் அன்று
சிறு குருவிகளும், பறவைகளும் வாழ்த்தை சொல்ல காத்து கொண்டு இருக்கிறது.
பனித்துளி கூட அவள் விட்டில் கோலம் போட்டு கொண்டு இருக்கிறது.
ஆகாயம் அவளை ஆசிர்வதிக்க வந்து கொண்டு இருக்கிறது.
அர்சனை செய்ய பூக்கள் காத்து கொண்டு இருக்கின்றன.
சூரியன் கூட அவளை இன்று சிரித்த முகத்தோடு வரவேற்க ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது.

Monday, January 24, 2011

என் மனதில் ரணம்


நிலவு கூட இப்போது கரைகிறது..நீ இல்லாத இந்த இரவில்...
நட்சத்திரம் கூட இப்போது நகை ஆடி சிரிக்கிறது...
தென்றல் கூட என் மேனி உரசி செல்ல மறுகிறது..
என் மனதில் ரணம் இட்ட பெண்ணே இன்று ஏன் என் அருகில் இல்லை...

போர்முனை காதல்


போர் முனையில் கூட பல போர்களை வென்று விடலாம் பெண்ணே ....
ஆனால் உன்னை பார்த்த உடனே என் மனதில் ஆயிரம் முறை தோற்றது விட்டேன்...
என் காதலை சொல்ல....

Wednesday, January 19, 2011


பார்க் பெண்ட்ச் கூட என் பாரத்தை தாங்க மறுக்கிறது.
நீ சாயிந்த என் தோல் கூட இப்போது எனக்கு பாரமாகிறது.
நமக்கு நிழல் தந்த மரம் கூட இப்போது நெருப்பாய் எரிக்கிறது..
இப்போது எனக்கு பகல் கூட பாசாங்கு செய்துதடி...
என் சாப்பாடு கூட உள்ளே போக மறுக்கிறது இப்போது...
இரவு கூட என் மீது இரக்கம் காட்டவில்லை..
இறைவன் படைத்து விட்டான்...நீ இருக்கும் இந்த பூமியில் என்னை...
இதயம் எனக்கு துடிக்கவில்லை.....உன்னை பார்த்த முதல்...
என் இறுதிக்குள் வந்துவிடு....இல்லாவிடில் என் இறுதி ஒர்வரத்தில் உன் முகத்தை காட்டிவிடு...
அப்போது தான் என் ஆத்மா சாந்தி....சாந்தி அடையும்...

Monday, January 10, 2011

கருப்பு கருவறை






இருட்டு அறையில் என்னை பிடித்து அடைத்து விட்டாய்... தண்ணிரில் தலையணை செய்துவைத்தாய் ... தாகம் அடிக்கவில்லை, வயறு பசிக்கவில்லை, நீ உண்ணும் உணவை முழுவதும் நான் உண்ண கொடுத்து விட்டாய்... உணர்வில்லை, உணர்ச்சி இல்லை, உள்ளே யாரும் இல்லை, வெளியே வர விருப்பம் இல்லை, என் என்றால் உன் வயற்றில் இருக்க எனக்கு பத்து மாதம் போதாது...பத்து யுகம் வேண்டும்....

Thursday, January 6, 2011

கல்லறை காதல்


பறவை ஆக இருந்து இருந்தால் பறந்து வந்து இருப்பேன்...
பரிசல் ஆக இருந்து இருந்தால் தண்ணிரில் வந்து இருப்பேன்...
பாட்டாக இருந்து இருந்தால் வரிகால இருந்து இருப்பேன்...
பேருந்துதாக இருந்து இருந்தால் நீ இருக்கும் இடத்தில நின்று இருப்பேன்...
பித்தனாக இருந்து இருந்தால் உன் பெரில் கவிதை எழுதி இருப்பேன்...
பனியாக இருந்து இருந்தால் உன் மேனி தழுவி இருப்பேன்...
கனியாக இருந்து இருந்தால் உன் வயிற்றில் இருந்து இருப்பேன்...
காதணியாக இருந்து இருந்தால் உன் காதை தொட்டு இருப்பேன்...
கவியாக இருந்து இருந்தால் உன் பற்றி பாடி இருப்பேன்...
காலை ஆக இருந்து இருந்தால் உன் முகத்தில் முழித்து இருப்பேன்...
காற்றாக நான் இருந்தால் உன் மூச்சில் கலந்து இருப்பேன்...
கரையாக இருந்து இருந்தால் அலை ஆக வந்து இருப்பேன்...
செடியாக இருந்து இருந்தால் உனக்காக பூத்திருப்பேன்....
பெண்ணே ! நான் இப்போது
கல்லறையாக இருபதினால் உனது கண்ணீராக இருக்கெனடடி.....

எனக்குள் இதயம்




எனக்குள் இருக்கும் இதயம்
என்னை கேட்டது...என்னடா இன்று என்னை அதிகம் துடிக்க வைக்கறாய் என்று
நான் சொன்னேன்...
இன்று என்னவள் என்னை பார்த்து விட்டால்.....
அதற்கு இதயம் சொன்னது ....
வேண்டாம்...வேண்டாம்...பார்த்ததுதற்கே என்னை துடிக்க வைக்கறாய்
நீ பழகி விட்டால் என் துடிப்பை நிறுத்தி விடுவாய் என்று....
அதற்கு நான் சொன்னேன்...
அவளை பார்க்க வில்லை என்றால் எனக்கு இதயம் ஒன்று இருக்கிறது என்று மரந்தே இருப்பேன் .....

Wednesday, January 5, 2011

என்றுமே நிரந்தரம் ஆகி விட்டாய்.....


நிலா கூட ஒரு நாள் நிழல் தர மறுத்து விடலாம்....
சூரியன் கூட ஒரு நாள் சுருங்கி விடலாம் ...
மரம் கூட ஒரு நாள் மரத்து விடலாம்....
மணி கூட ஒரு நாள் மௌனம் ஆகி விடலாம் ....
செடி கூட ஒரு நாள் வாடி விடலாம்.....
காற்று கூட ஒரு நாள் கறுத்து விடலாம்....
நீர் கூட ஒரு நாள் வற்றி விடலாம்...
நிலம் கூட ஒரு நாள் நீங்கி போகலாம்....
பெத்தவள் கூட ஒரு நாள் ஒதுங்கி விடலாம்....
சிற்பம் கூட ஒரு நாள் சிதைந்து விடலாம்....
சிரிப்பு கூட ஒரு நாள் வெறுத்து போகலாம்...
பதில் கூட ஒரு நாள் கேள்வி ஆகி விடலாம்...
நிறை கூட ஒரு நாள் குறை ஆகி விடலாம்...
நிலை இட்ட பெண்ணே நீ மட்டும் ஏன் என்றுமே நிரந்தரம்
ஆகி விட்டாய்.....

Sunday, January 2, 2011

நன்பேண்டா...


இரு இதயம் வந்தது தடா....எனக்கு
இனி இவ்வுலம் சிறியது தடா.....
தாய் இல்லை.....தந்தை இல்லை.....நீ..........
தறி கேட்டு போன என்னை திரியாக மாற்றி விட்டாய்...
திசை மாறி போன என்னை இசை ஆக ஆக்கி விட்டாய்...
பசை ஆக இருந்த என்னை விசை ஆக சுற்றி விட்டாய்...
இது காதல் இல்லையடா....காமம் இல்லையடா....
பாசாங்கு இல்லையடா.... என்று பறை சாற்றிடுவேன்....
நன்றியுடன் இருப்பதால் நாயும் இல்லையடா....
நண்பன் நீ அருகில் இருபதனால் இந்த பூமி கூட சிரியதுடா....