நிலா கூட ஒரு நாள் நிழல் தர மறுத்து விடலாம்....
சூரியன் கூட ஒரு நாள் சுருங்கி விடலாம் ...
மரம் கூட ஒரு நாள் மரத்து விடலாம்....
மணி கூட ஒரு நாள் மௌனம் ஆகி விடலாம் ....
செடி கூட ஒரு நாள் வாடி விடலாம்.....
காற்று கூட ஒரு நாள் கறுத்து விடலாம்....
நீர் கூட ஒரு நாள் வற்றி விடலாம்...
நிலம் கூட ஒரு நாள் நீங்கி போகலாம்....
பெத்தவள் கூட ஒரு நாள் ஒதுங்கி விடலாம்....
சிற்பம் கூட ஒரு நாள் சிதைந்து விடலாம்....
சிரிப்பு கூட ஒரு நாள் வெறுத்து போகலாம்...
பதில் கூட ஒரு நாள் கேள்வி ஆகி விடலாம்...
நிறை கூட ஒரு நாள் குறை ஆகி விடலாம்...
நிலை இட்ட பெண்ணே நீ மட்டும் ஏன் என்றுமே நிரந்தரம்
ஆகி விட்டாய்.....
No comments:
Post a Comment