ஜன்னல் ஓரத்தில் இருக்கும் என் குருவி கூடு......
பக்கத்து விட்டு என் சரசு பாட்டி, ரஞ்சனா அக்கா, ரவி அண்ணா, பொன்னுசாமி தாதா ...
எங்கள் விட்டில் எதிரில் உள்ள ஆலமரம்...
இதோ நான் மூன்று மாததிருக்கு முன்னால் என் அப்பாவுடன் என் வயலில்
நட்ட என் சூரியகாந்தி செடி இப்போது எங்கள் வயல் முழுவதும் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறது...
எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒரு பொம்மை வாங்கியது....
என் ஊர் ஆற்றில் நான் முதல் முதலாக பிடித்த என் மீன்...
எங்கள் விட்டில் என்னுடைய ரோசி நாய்க்குட்டி குட்டி போட்டது.....
நானும் என் தோழியும் சிறிய அடுப்பில் சோறு செய்து சாப்பிட்டது...பக்கத்து விட்டு என் சரசு பாட்டி, ரஞ்சனா அக்கா, ரவி அண்ணா, பொன்னுசாமி தாதா ...
எங்கள் விட்டில் எதிரில் உள்ள ஆலமரம்...
இதோ நான் மூன்று மாததிருக்கு முன்னால் என் அப்பாவுடன் என் வயலில்
நட்ட என் சூரியகாந்தி செடி இப்போது எங்கள் வயல் முழுவதும் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறது...
எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒரு பொம்மை வாங்கியது....
என் ஊர் ஆற்றில் நான் முதல் முதலாக பிடித்த என் மீன்...
எங்கள் விட்டில் என்னுடைய ரோசி நாய்க்குட்டி குட்டி போட்டது.....
எங்கள் பள்ளியில் எங்கள் வாத்தியார் என்னை கையெழுத்து பெரிது பெரிதாய் இருக்கிறது என்று சொல்லி அடித்ததை....
விட்டு தெரியாமல் திருட்டு பீடி அடித்தது...
எங்கள் கிராமத்தில் பண்டிகை நாளில் தெருவில் எம். ஜி.ஆர் படத்தை போட்டபின் திரைக்கு பின்னால் எம். ஜி.ஆர் இருக்கிறரா என்று பாத்து
எமாந்து போனது....
என் விட்டு கிணற்றில் என் வாத்தியாரை திட்டி பார்த்து வரும் எதிரொலியை கேட்டு சிரித்து கொண்டது.....
எங்கள் ஊரிலே இருக்கிற பஞ்சாயத்து தொலைகாட்சி பெட்டியை பார்த்து பூரித்து போனது.....
என் தம்பி இருவரும் பிறக்கும் போது எனக்கு தங்கச்சி பிறக்கவேண்டும் என்று அழுதது..
என் விட்டு மொட்டை மாடியில் வடகம் காய போட்டு இருந்ததை திருடி சாபிட்டது...
இது எல்லாம் நான் எழுதி கொண்டு இருதேன் நான் விளையாடிய வீட்டை விற்று பக்கத்து விட்டில் இருந்து கொண்டு..
என் வீடு, என் காடு, இது எல்லாம் இப்போது என் கண் முன்னே பெரிய பெரிய கடைகளாக, வீடுகளாக மாறி இருந்தது...
No comments:
Post a Comment