Thursday, February 2, 2012

வாழவேண்டும் நித்தம் ....


கொஞ்சம்..... கொஞ்சம்...
என் அருகில் கொஞ்சம்...

சத்தம்......சத்தம்....
அவள் சிரிப்பு சத்தம்....

கத்தும்....... கத்தும்....
அவள் நினைவு இரவில் கத்தும்..

கொத்தும்......கொத்தும்
என் உயிரை கொத்தும்...

மித்தம்..........மித்தம்
என் உயிர் முடியும் மித்தம் ....

மொத்தம்....மொத்தம்....
என் மூச்சில் அவள் கலந்து விட்டால் மொத்தம்.....

நித்தம் ....நித்தம் ....
அவளோடு வாழவேண்டும் நித்தம் ....





Wednesday, December 21, 2011

விழிகள் நூறு வேண்டும்....


பறக்க, பறக்க, பல இறகு வேண்டும்,
பார்க்க, பார்க்க விழிகள் நூறு வேண்டும்....
பேச, பேச இதழ்கள் பல கோடி வேண்டும்....
வாழ, வாழ அவள் மட்டுமே போதும்......

Friday, December 16, 2011

நாய் மட்டுமே.......நானே !



அவள் போகும் பாதை தேடி சென்றேன்...
அவளை பார்த்த பின்பு என் வழியை மறந்து நின்றேன்.....

அவள் காதல் பிச்சை போட்ட பின்னே....
நான் பின்னே சென்று விட்டேன் நாயை போல நானே!

போனபின்பு தெரிந்து கொண்டேன்..ஐயோ பெண்ணே!
அவளை காவல் காக்கும் நாய் மட்டுமே.......நானே !

நான் ஓடிய அந்த வேலை..


இரவு முழ்கும் வேலை...
இதழ்களில் வறுடும் வேலை..

என் இதயத்தில் ஒரு சோலை...
இதயமெங்கும் கட்டிவிட்டால் அவள் சேலை...

அவள் கற்பனையில் வாழ்ந்து வந்தேன்...சில வேலை...

தினம்... தினம்....என்னை பார்க்கும் அந்த வேலை...
நான் காதல் சொல்ல முடியாமல் போகிறது சில வேலை...

தாறுமாறாக நான் ஓடிய அந்த வேலை..

என்னை தட்டி கொடுத்து.......
தைரியமாக செல்ல சொன்னால்
அந்த பாவை....

Sunday, November 27, 2011

குருவி கூடு..


என் இதயம் குருவி கூடு..
கூடில் இட்டுவிட்டால் முட்டை.....

தினமும் இரவில்
அவளின் கற்பனையை கனவில் இட்டு....
அடைகாத்து வந்தேன் தினமும் கஷ்டப்பட்டு.....

காதல் என்ற குருவி வந்து..
முளைதனவே இறகு கொஞ்சம்...

மறதனவே குருவி கூட்டை...
ஐயோ பாவம் அந்த குருவி கூடு...

Friday, November 18, 2011

காணாத என் இதயம்




அவள் கண்கள் பட்ட விண்மீன்கள்
கரைந்து போனதோ?

அவள் கால் பட்ட இடங்கள் எல்லாம்
எரிந்து போனதோ?

அவள் தென்பட்ட திசைகள் எல்லாம்
மாறி போனதோ?

அவளை தினமும் தொட்ட தென்றல் இன்று
மறைந்து போனதோ?

அவள் இல்லாத இன்று கருமேகம்
கூட கண்ணீர் சிந்துகிறதோ ?

காணாத என் இதயம் கூட
இன்று என் உயிரை கட்டி விட்டதோ!

Tuesday, November 15, 2011

உன் விழி..


உன் விழி..
எனக்கு உயிர் வலி...

உன் ஒரு சிரிப்பு...
என் இதயத்துக்கு நானே வைத்துகொண்ட நெருப்பு....

உன் ஒரு அசைவு..
என் நாடி எங்கும் உன்னுடைய பிம்பத்தின் கசிவு.....

என் உசுரு....
உனக்கு நான் கொடுகின்ற பரிசு......