Friday, January 28, 2011

என்னையும் உனக்கு பிடிக்குமா


வானவில்லை உன்னக்காக ஆடையாக ஆக்க ஆசைப்பட்டேன்..
ஆனால் வானவில்லை அழகை விட நீ அழகாக இருப்பதால் உனக்கு பயந்து
எங்கேயோ ஓடி மறைந்து கொண்டது....
பனித்துளியை உனக்காக அருவியாக அமைக்க ஆசை பட்டேன்..
ஆனால் என்னவோ உன் மேனி அழகை கண்டு தொட பயப்பட்டு
எங்கேயோ பாய்ந்து கொண்டது....
சூரியனை கூட கட்டி இழுத்து வந்து உன் நெற்றிக்கு பொட்டாக இட ஆசைப்பட்டேன்...
ஆனால் என்னவோ அது கூட உன் நெற்றியில் இருக்கும்போதுதான் அழகாக இருக்கிறது என்று
யாரவது சொல்லி விடுவார்கள் என்று மாயமாய் மறைந்து கொண்டது....
இப்படியெல்லாம் இருக்கும் உன் அழகை கண்டு நான் அந்த அழகில் நான் என்னை மறைத்து கொண்டேன்..
என்னையும் உனக்கு பிடிக்குமா என்று பயத்தோடு.....

No comments: